கொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்

       பதிவு : Jun 05, 2018 12:09 IST    
திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் கொள்ளைக்காரன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் கொள்ளைக்காரன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' படம் கடந்த மே 18இல் வெளியாகி தற்போதுவரை திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓடி கொண்டிருக்கிறது. இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, அஞ்சலி, சில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கணேசா இயக்கத்தில் 'திமிரு புடிச்சவன்' படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இந்த படத்திற்கு 'கொலைகாரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

 

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை விஜய் ஆண்டனி உறுதி படுத்தியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி நண்பர் பிரதீப், தியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார். 


கொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்