விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா

       பதிவு : Apr 12, 2018 18:19 IST    
நடிகையர் திலகம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகையர் திலகம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரையுலகை கவர்ந்த விஜய் தேவரகொண்டா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தற்போது தமிழில் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. மேலும் விஜய் தேவரகொண்டா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ள 'நடிகையர் திலகம்' படத்திலும் நடித்துள்ளார்.

மறைந்த முன்னணி நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு மிகுந்த பொருட்செலவில் பல முன்னணி நடிகர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் சாவித்ரியாக நடிகை கீர்த்தி சுரேசும், அவரது கணவராக ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை சமந்தா பத்திரிகை நிருபராக மதுரவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்த படத்தின் கதையை நடிகை சமந்தா, மதுரவாணி கதாபாத்திரத்தில் எடுத்துரைப்பதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை எடுத்துரைக்கும் போட்டோ கிராபர் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்து புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, விஜய் ஆண்டனி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 9-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

நடிகையர் திலகம் படத்தில் விஜய் தேவரகொண்டா போஸ்டர்நடிகையர் திலகம் படத்தில் விஜய் தேவரகொண்டா போஸ்டர்

விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்