ads

ரீமேக்கில் தொடரும் ஜெயம் ரவியின் புது படம்

jayam ravi sings tamil remake of baby movie

jayam ravi sings tamil remake of baby movie

கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ரீமேக் படமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி போன்ற அனைத்து ரீமேக் படங்களும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பு பெற்றிருந்தது. மேலும் ஜெயம் ரவிக்கு இப்படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்திருந்தார். 

இந்த வெற்றி படங்களை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கடந்த 2015ம் ஆண்டில் அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தி திரையுலகில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்ற 'பேபி' படத்தின் ரீமேக் ஆகும். இந்தியாவின் ரகசிய மிஷன் மூலமாக ஆபத்தான தீவிரவாதிகளை கண்டு பிடிப்பது தான் இப்படத்தின் கதைக் களம். இதில் அக்ஷய் குமார் பல அதிரடி த்ரில்லர் காட்சியை மேற்கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்த்திருந்தார். நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராணா டகுபதி, டாப்ஸி, சுஷாந்த் சிங், மதுரிமா துளி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர்.           

 ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு இயக்குனர், தயாரிப்பாளர், இதர நடிகர் - நடிகைகள் சம்மந்தமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ மற்றும் ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹமத் இயக்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். 

ரீமேக்கில் தொடரும் ஜெயம் ரவியின் புது படம்