ads

ஜனவரி 26 பட்டியலில் இருந்து வெளியேறிய டிக் டிக் டிக்

jayam ravis tik tik tik release date change

jayam ravis tik tik tik release date change

ஏஎல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'வனமகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயம் ரவி விண்வெளியை மையமாக கொண்டு உருவாகி வரும் 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் முதல் விண்கலம் சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனம் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களிடமும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு வெகுவான எதிர்பார்ப்புகளும் படத்தின் மீது ஏற்பட்டுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கிவருகிறார். இவர் நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களை இயக்கிவிருப்பது குறிப்பிட தக்கது. விண்கலனை சார்ந்த 'டிக் டிக் டிக்' படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. இவர்களது கூட்டணியில் முன்னதாக வெளிவந்த 'மிருதன்' படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றதோடு 'மிருந்தன் 2' விற்கான (இரண்டாம் பாகம் ) எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.      

இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் கூட்டணியில் ஜெயம் ரவி மேஜிக் மேன் கெட்டப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவர உள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவருடன் இணைந்து ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றனர். இதுவரை தமிழ், தெலுங்கில் வெளிவந்த போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. நேமிசன்ட் ஜபக் நிறுவனம் சார்பில் ஹிதேஷ் ஜபக் தயாரித்து வரும் இப்படத்தினை புகழ் பெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமான முறையில் வெளியிட உள்ளது. இந்த படம் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளிவர இருந்த இந்நிலையில் சில காரணத்தினால் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றியுள்ளது. மேலும் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அதிகார பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.        

ஜனவரி 26 பட்டியலில் இருந்து வெளியேறிய டிக் டிக் டிக்