ads

டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு

tik tik tik movie Telugu official trailer release

tik tik tik movie Telugu official trailer release

'நாய்கள் ஜாக்கிரதை' இயக்கிய இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன்' படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக சக்தி சவுந்தர் ராஜன், ஜெயம் ரவி கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 'மீகாமன்' படத்தை தயாரித்த ஹிதேஷ் ஐபக் நேமிசன்ட் ஐபக் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், மன்சூர் அலி கான், ஜெயபிரகாஷ், அருண், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் ஜனவரி 26-இல் இந்த படம் வெளியாகவுள்ளது.

முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி மகனான ஆரவ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்நிலையில் தெலுங்கில் வெளிவரவுள்ள இந்த படத்தின் திரையரங்கு உரிமையை எஸ்டிடிவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சடலவாடா பத்மாவதி கைப்பற்றியுள்ளார். முன்னதாக இந்த படத்திலிருந்து தெலுங்கு மோஷன் டீசர், தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து 'பாகுபலி' படத்தில் நடித்த நடிகர் அதிவி சேஷ் இந்த படத்தின் தெலுங்கு டீசரை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் தெலுங்கு ட்ரைலரை இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் வெளியிட்டுள்ளார்.

டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு