×

ads

டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா

tik tik tik movie audio launch
tik tik tik movie audio launch

'வனமகன்' வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தற்பொழுது நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவில் முதல் விண்வெளியை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள், விமர்சனகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு திரைத்துறையினர்  பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக் மேன் கதாபத்திரத்தில் களமிறங்கியுள்ளார். அவரின் மகன் ஆரவ் ஜெயம் ரவி இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். 

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் குடியரசு தின விருந்தாக ஜனவரி 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இமானின் 100 வது படமாக 'டிக் டிக் டிக்' விளங்குகிறது. இந்த படத்தை ஜபக்ஸ் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ளார். 

இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் என்ற இடத்தில நடைபெற உள்ளது. இந்த படத்தின் இசையை இமான் காலை 9:30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியை அறிமுகப்படுத்துவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ads

டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா

ads