ads

டிக் டிக் டிக் படத்தின் முக்கிய தகவல் வெளியீடு

tik tik tik new announcement

tik tik tik new announcement

ஏஎல்.விஜய் இயக்கத்தில் 'வனமகன்' படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் தற்பொழுது உருவாக்கி வரும் படம் டிக் டிக் டிக். இந்த படத்தினை சக்தி சவுந்தர் ராஜன் இயக்குகிறார். இந்த படத்தின் நாயகியாக  நிவேதா பெத்துராஜ்  நடித்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக விண்வெளியை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் பெற்று வருகிறது. விண்கலனை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெகுவான எதிர்பார்ப்புகள் படத்தின் மீது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாகவே வெளிவந்த  படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர், சிங்கிள் ட்ராக் வீடியோ போன்றவை ரசிகர்கள் இன்றளவும் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர்.          

‘ஜபக்’ஸ் மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்து வரும் இப்படத்தினை குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ல் வெளியிட உள்ளனர். இந்நிலையில் படத்தின் அனைந்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படக்குழு போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் டி.இமான் இசையமைக்க எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.மேலும் ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியில் ஜெயம் ரவி மகன் ஆரவ் ஈடுபட்டு வருவதாக தகவலை ஜெயம் ரவி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் முக்கிய தகவலை இன்று மாலை 5மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் இசை அடுத்த மாதம் ஜனவரி 4-இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இதனை இந்த படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

tik tik tik movie audio releasetik tik tik movie audio release

டிக் டிக் டிக் படத்தின் முக்கிய தகவல் வெளியீடு