ads

டிக் டிக் டிக் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி

tik tik tik movie single track release date

tik tik tik movie single track release date

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'டிக் டிக் டிக்'. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படம் என்பதால் பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே ஆதரவும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. நடிகர் ஜெயம் ரவி அண்ணனாகிய இயக்குனர் மோகன் ராஜா "என் தம்பி ஹாலிவுட் படத்தில் நடிச்சிட்டான் ரொம்ப பெருமையா இருக்கு" படக்குழுவினரை பாராட்டியுள்ளார். 

இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் இமான் இசையில் மதன் கார்க்கி வரிகளில் யுவன் சங்கர் ராஜா, சுனிதா சாரதி பாடிய பாடலை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி டிசம்பர் 11-ஆம் தேதி பாடல் வெளியாகிறது. மேலும் மலேசியா பாடகரான யோகி பி இந்த படத்தில் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

டிக் டிக் டிக் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி