×

ads

டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

tik tik tik new poster
tik tik tik new poster

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'டிக் டிக் டிக்' படம் உருவாகியுள்ளது. இந்த படம் விண்வெளியை சார்ந்து எடுக்கபட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த ட்ரைலருக்கு ரசிகர்கள், பிரபல சினிமா துறையினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் இருப்பதால் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜா என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிசிட்டான் என்று அவரது ட்விட்டரில் பதிவு செய்து பாராட்டினை தெரிவித்திருந்தார். 

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த ஒரு பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா, சுனிதா சாரதி இணைந்து பாடியிருக்கின்றனர். இந்த பாடலை டிசம்பர் 11ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் சம்மந்தப்பட்ட அதிகார பூர்வ வெளியீடு தேதியை நேற்று மாலை 7மணிக்கு வெளியிட்டுள்ளது. இப்படம் குடிஅரசு தின விருந்தாக ரசிகர்களுக்கு ஜனவரி 26ம் தேதி பெரிய திரையில் வரவிருக்கிறது.     

ads

 

டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ads