ads
வைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்
வேலுசாமி (Author) Published Date : Jan 18, 2018 13:36 ISTMovie News
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படம் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வருமான வரித்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் சூர்யாவின் ஆக்ரோஷமான வசனங்களும் சண்டை காட்சிகள் மட்டுமே இடம் பெற்றது. ஆனால் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட சூர்யாவை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பலமாக ஈர்த்துள்ளது. இந்த படம் தெலுங்கில் 'கேங்' என்ற தலைப்பில் வெளியானது. பொங்கல் பண்டிகையில் சூர்யா குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடாமல் ஆந்திரா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். தனது ரசிகர்களை ஆந்திராவில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திரா, ராஜமுந்திரியில் மேனகா தியேட்டருக்கு சென்றுள்ளார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. வேறு வழி இல்லாமல் அருகில் இருந்த கேட்டின் வழியாக ஏறி சாதாரண மனிதர் போல் வெளியேறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு ஏராளாமான வதந்திகளை பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
adsவைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்
-   Tags : 
thaana serntha kootam movie updates
actor surya
thaana serntha kootam movie
actress keerthi suresh
comedy actor senthil
actor karthik
actress ramya krishnan
gang movie release
gang movie release in andhra pradesh
surya escape photo
suriya escape from menaka theatre in andhra pradesh
suriya viral escape photo
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கதை
தானா சேர்ந்த கூட்டம் திரைவிமர்சனம்
தானா சேர்ந்த கூட்டம் டப்பிங்
தானா சேர்ந்த கூட்டம்
வைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்
suriya escape photo
Related News
ads