ads
அவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் - விஜய்
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 14, 2018 20:31 ISTபொழுதுபோக்கு
அவசியம் இருந்ததால் தான் சர்ச்சை வசனங்களை பேசினேன் என்று விகடன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருது கமல் ஹாசன் தலைமையில் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் கூறியதாவது:"தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனாக எனக்கு பெருமையாக உள்ளது.
சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.