செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்

       பதிவு : Mar 13, 2018 12:57 IST    
செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் தற்போது அதிதி ராவ் இணைந்துள்ளார். செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் தற்போது அதிதி ராவ் இணைந்துள்ளார்.

இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

சமூகத்தில் தொழிற்சாலைகளின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் சிம்பு மற்றும் அரவிந் சாமி ஆகியோரது படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்போது நடிகை அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான புகைப்படங்கள் தற்போது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து வரிகளில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டீசர் மற்றும் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். 

 


செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்