செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்

       பதிவு : Feb 26, 2018 17:48 IST    
Joined With Chekka Chivantha Vaanam Movie Shooting. Photo Credit ArunVijay @arunvijayno1 (Twitter) Joined With Chekka Chivantha Vaanam Movie Shooting. Photo Credit ArunVijay @arunvijayno1 (Twitter)

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இதில் தற்போது நடிகர் சிம்பு மற்றும் அரவிந் சாமி ஆகியோரது காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார். நடிகர் சிம்பு மற்றும் அரவிந் சாமி ஆகியோரது காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் நடிகர் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி ஆகியோரது கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

 

இந்த படத்தில் நடிகர் சிம்பு ஐடி ஊழியராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை படக்குழு தற்போது மறுத்துள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. முன்னதாக சென்னை இசிஆர் ரோட்டில் படப்பிடிப்பு நடந்தது. இதன் பிறகு வானகரம் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் படப்பிடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் 26 படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

 


செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்