ads
இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வேலுசாமி (Author) Published Date : Feb 09, 2018 15:44 ISTMovie News
இயக்குனர் மணிரத்னம் கடந்த ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு தற்போது நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந் சாமி, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்களை ஒன்றிணைத்து மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் அடுத்த அறிவிப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் 'செக்கச்சிவந்த வானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.இன்று வெளியிடவுள்ள இந்த அறிவிப்பில் இந்த படத்தின் டைட்டில், இசை போன்றவை வெளிவருவதாக தகவல் வெளியாகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து மலையாள நடிகர் பகத் பாசில் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 'காற்று வெளியிடை' படத்தில் நாயகியாக நடித்த அதிதி ராவ் இணைந்துள்ளார். மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருந்த இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை அமைத்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
-   Tags : 
director mani ratnam new multi star movie first look poster
director maniratnam new movie title
director maniratnam latest announcement
simbu new movie first look
vijay sethupathi mani ratnam movie first look poster
இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குனர் மணிரத்னம்
சிம்பு
விஜய் சேதுபதி
அரவிந் சாமி
நயன்தாரா
chekka chivantha vaanam movie first look poster
director mani ratnam new movie chekka chivantha vaanam
vijaysethupathi simbu maniratnam movie chekka chivantha vaanam
செக்கச்சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குனர் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம்
Related News
ads