ads

ஆதிக் ரவிசந்திரன் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அமைரா தஸ்துர்

Actress Amyra Dastur paired with Actor GV Prakash Kumar in Director Adhik Ravichandran directional movie

Actress Amyra Dastur paired with Actor GV Prakash Kumar in Director Adhik Ravichandran directional movie

நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'நாச்சியார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா மற்றும் இவானா ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100 % காதல், சர்வம் தாள மயம், ரெட்டை கொம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இதில்  செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா போன்ற படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 100% காதல், சர்வம் தாள மயம் போன்ற படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் விஷன் ஐ மீடியா நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படம் 3D கேமிராவில் எடுக்கப்பட உள்ளது. இதனால் இந்த படத்திற்கு '3D' என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடிகை அமைரா தஸ்துர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்க உள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அனேகன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் ஜாக்கி சான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கும் பூ யோகா' என்ற படத்தில் கைரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு ஜிவி பிரகாசுடன் இணையவுள்ளார்.

ஆதிக் ரவிசந்திரன் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அமைரா தஸ்துர்