நடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி

       பதிவு : Dec 08, 2017 14:24 IST    
rai laxmi reveals jai new movie rai laxmi reveals jai new movie

ஜெய் நடிப்பில் சினிஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பலூன்'. இந்த படத்தை வரும் டிசம்பர் 29-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து ஜெய் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் 'ஜருகண்டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். 

இந்நிலையில் நடிகர் ஜெய்யின் புதிய படம் பற்றிய அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வரலட்சுமி, கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்று தகவல்கள் வெளியாகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் ஜெய் ஐ.டி ஊழியராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

 

varalaksmi catherine terasa new movievaralaksmi catherine terasa new movie

நடிகர் ஜெய்யின் புது பட அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்