ads

நடிகை த்ரிஷாவின் மோகினி ட்ரைலர்

mohini official trailer

mohini official trailer

நடிகை திரிஷா த்ரில்லர் படமான மோகினி, சதுரங்க வேட்டை 2 படங்களோடு சுந்தர் பாலு இயக்கத்தில் கர்ஜனை படத்திலும், 1818, ஹேய் ஜுடே, 96 போன்ற படங்களிலும் நடித்துவருகிறார். இயக்குனர் ரமணா மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'மோகினி'. இந்த படத்தை மார்வெல் ஒர்த் ப்ரொடக்சன் சார்பில் எல் லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னணி நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு தேதியை முன்னதாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

நடிகை த்ரிஷாவின் மோகினி ட்ரைலர்