ads

இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்

sabash naidu marudhanayagam movies dropped

sabash naidu marudhanayagam movies dropped

நடிகர் கமல்ஹாசன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடக்கும் போது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனால் இந்த படத்தின் வெளியீடு தேதி தற்போதுவரை முடிவாகவில்லை. மேலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்கும்போது அப்போது நடந்த விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதனால் இந்த படமும் இன்னும் நிறைவடைய வில்லை. இதற்கான படப்பிடிப்பு அடுத்ததாக நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியல் நுழைந்ததால் 'சபாஷ் நாயுடு' படமும் தாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தொடங்க உள்ளதாகவும் ‌படக்குழு தெரிவித்தது. இதற்கிடையே வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில்  அமெரிக்காவில் ஹார்வர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் அளித்த பேட்டியில் " தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவே கட்சியை தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது நோக்கம். நாளைய தமிழர்களுக்காக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய மாநிலமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.

முன்னதாக எனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பணிகளை செய்து வந்தோம். இனிமேல் அரசியலில் களமிறங்குவதன் மூலம் மையத்தில் நின்று தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இந்த பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்." என்று அவர் தெரிவித்தார். இதனை அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று அவருக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் " தீவிர அரசியலில் ஈடுபடும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை" என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வெளியான பிறகு 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்க உள்ளது. எனவே, நடிகர் கமல் ஹாசனுக்கு 'இந்தியன் 2' படமே கடைசி படமாகும். இதன் மூலம் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

after vishwaroopam2 indian2 no more films from kamal haasanafter vishwaroopam2 indian2 no more films from kamal haasan

இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்