புதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

       பதிவு : Jun 14, 2018 12:23 IST    
விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்ததாக புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு மாரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்ததாக புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு மாரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'விக்ரம் வேதா'. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக முதன் முறையாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களுடைய நடிப்பும் ரொமான்சும் ரசிகர்களிடம் தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதுப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு 'மாரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்க உள்ளார். மாதவன் தற்போது நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் 'சவ்யசாச்சி' மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜீரோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

மாதவன் நடிப்பில் 56வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த படம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில் "என்னுடைய அடுத்த புதுப்படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். திலிப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் 18ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விக்ரம் வேதா படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


புதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்