ads

காஞ்சனா 2 ரீமேக்கில் இணையும் ஹிந்தி முன்னணி நடிகர்

akshay kumar act in hindi remake for kanchana2

akshay kumar act in hindi remake for kanchana2

முனி படத்தின் தொடர்ச்சியாக கடந்த 2015ம் ஆண்டில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காமெடி கலந்த த்ரில்லர் படமான 'காஞ்சனா 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனதின் மூலம் அவரே தயாரித்த இப்படத்தில் டாப்சி, நித்யா மேனன் என இரு நாயகிகள் இணைந்திருந்தனர். மேலும் இவர்களுடன் கோவை சரளா, ரேணுகா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்திருந்தனர்.     

இந்த படத்தினை தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகனாக ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அக்க்ஷய் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் 'காஞ்சனா 2' படத்தில் நித்தியா மேனன் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இரண்டாவது நாயகியாக வளம் வந்த டாப்ஸியின் நடிப்பிற்கும் வெகுவான வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தில் இடம் பெற்ற மொட்ட சிவா கேட்ட சிவா, பேயிக்கும் பேயிக்கும் சண்ட அத ஊரே வேடிக்க பாக்குது போன்ற வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கோவை சரளாவின் காமெடிகளுக்கும் அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்தது.      

காஞ்சனா 2 ரீமேக்கில் இணையும் ஹிந்தி முன்னணி நடிகர்