ads

அமலா பாலின் அதோ அந்த பறவை போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அமலா பாலின் அதோ அந்த பறவை போல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, Photo Credit - @MsKajalAggarwal (Twitter)

அமலா பாலின் அதோ அந்த பறவை போல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, Photo Credit - @MsKajalAggarwal (Twitter)

நடிகை அமலா பால் கடந்த 2010-இல் வெளியான 'மைனா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக பிரபலமானார். இவர் இதற்கு முன்னதாக தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளியான 'மைனா' படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல வரவேற்பினை பெற்றது.

இதன் பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இவர் தற்போதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சஸன், ஆடுஜீவிதம் மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் அரவிந் சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது மகளிர் தினமான இன்று அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கேர் வினோத் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா, சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பேஜோய் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை செஞ்சுரி இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் தயாரித்து வருகிறார். சமூக கருத்துக்களை சார்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு எல்லைகளில் அமைந்துள்ள காடுகளில் நடந்து வருகிறது.

மகளிர் தினத்தில் அமலா பாலின் புதுப்பட போஸ்டர், Photo Credit - @MsKajalAggarwal (Twitter)மகளிர் தினத்தில் அமலா பாலின் புதுப்பட போஸ்டர், Photo Credit - @MsKajalAggarwal (Twitter)