விக்ரம் வேதா படத்தை இந்தியில் தயாரிக்கும் அணில் அம்பானி

       பதிவு : Mar 15, 2018 13:02 IST    
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.

இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. முன்னதாக இவர்களுடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

இவர்களுடைய இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவான இந்த படம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆக்சன், சஸ்பென்ஸ் கலந்த படமாக வெளியான இந்த படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூலிலும் சாதனை படைத்து நூறு நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது.

 

இந்த படம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த படத்தின் வெற்றிக்கு படத்தின் இசை பக்க பலமாக இருந்தது. மாதவன், விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் நடிகை வரலட்சுமி, கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். தற்போது இந்த படத்தை புஷ்கர் -  காயத்ரி ஹிந்தியில் இயக்க உள்ளனர்.

ஹிந்தியில் உருவாகவுள்ள இந்த படத்தை அணில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட், சசிகாந்த்தின் வை நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நீரஜ் பாண்டேயின் சி ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்கவுள்ள நாயகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

 

தற்போது ரசிகர்கள் சல்மான் கான், ரித்திக் ரோஷன், ஆமிர் கான், ஷாருக்கான் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா இந்தியில் ரீமேக்காக உள்ளது.தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா இந்தியில் ரீமேக்காக உள்ளது.

விக்ரம் வேதா படத்தை இந்தியில் தயாரிக்கும் அணில் அம்பானி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்