ads

பாகமதிக்கு பிறகு கோபிசந்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா

தன்னுடைய 50வது படமான பாகமதிக்கு பிறகு அனுஷ்கா, தனது புது படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கோபி சந்த் நாயகனாக நடிக்கிறார்.

தன்னுடைய 50வது படமான பாகமதிக்கு பிறகு அனுஷ்கா, தனது புது படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கோபி சந்த் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான அனுஷ்கா ஐதராபாத்தை சேர்ந்தவர், இவர் தெலுங்கில் 'சூப்பர்' படத்தின் மூலம் 2005லும், தமிழில் மாதவனின் 'இரண்டு' படத்தின் மூலம் 2006லும் அறிமுகமானவர். இந்த படங்களுக்கு இவருடைய நடிப்பில் 50 படங்கள் வெளியாகி விட்டது. இவருடைய 50வது படம் இறுதியாக வெளியான பாகமதி. இதில் தமிழில் 17 படங்களிலும், தெலுங்கில் 33 படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2015இல் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய எடையை அதிகமாக  கூட்டி அதனை குறைக்க தற்போது வரையிலும் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் 'பாகுபலி 2' வில் இவருடைய எடையை கிராபிக்ஸ் பயன்படுத்தி குறைத்தனர். பாகமதிக்கு பிறகு எடை அதிகமாக இருப்பதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் தற்போது மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் தற்போது மீண்டும் திரைத்துறையில் ரீ என்ட்ரி ஆகிறார். இவருடைய அடுத்த படத்தை இயக்குனர் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இயக்க உள்ளார்.

சமீபத்தில் அனுஸ்காவிடம் கதையை கூறியுள்ளார், கதை பிடித்து போக இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இயக்குனர் ஜெயேந்திரா இயக்கத்தில் சமீபத்தில் நா நுவ்வே படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அனுஷ்காவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் கோபிசந்த் நடிக்க உள்ளார். ஏற்கனவே மூன்று படங்களில்  கோபி சந்துடன் இணைந்து நடித்துள்ள அனுஷ்கா மீண்டும் நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

பாகமதிக்கு பிறகு கோபிசந்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா