ads

பாகமதியை பாராட்டிய பிரபலம் மகிழ்ச்சியில் அனுஷ்கா

super star rajinikanth appreciated bhaagamathie movie

super star rajinikanth appreciated bhaagamathie movie

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த அதிரடி த்ரில்லர் படமான 'பாகமதி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு திரையின் முன்னணி நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் படத்தினை பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டி ஃபேஸ்புக் மூலம் தகவலை வெளியிட்டிருந்தார். இதனை தொடந்து தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தினை பார்த்து நடிகை அனுஷ்காவிற்கு தொலைப்பேசி ( போன் ) மூலம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் காரணத்தினால் அனுஷ்கா மகிழ்ச்சியடைந்து இருக்கிறாராம். மேலும் அனுஷ்கா 'ரஜினி சாரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்கவில்லை, இந்த பாராட்டு  எனக்கு ரொம்ப ஸ்பெஷல்' என கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.  

இயக்குனர் ஜி அசோக் இயக்கத்தில் உருவான இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட்டு திரையில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அனுஷ்காவின் அதிரடி வசனத்திற்கு ரசிகர்களிடம் இருந்து வெகுவான வாழ்த்துக்களும் பெற்று வருகிறது. எஸ். தமன் இசையமைத்து வந்த இப்படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேஇ ஞானவேல் ராஜா தயாரிக்க, தெலுங்கில் யுவி கிரியேஷன் சார்பில் வி வம்சி கிருஷண ரெட்டி தயாரித்திருந்தார். மேலும் இப்படத்தின் சில காட்சிகளின் வசனங்கள் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் டப் செய்யாமல் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.        

பாகமதியை பாராட்டிய பிரபலம் மகிழ்ச்சியில் அனுஷ்கா