ads

பாகமதி படக்குழுவை பாராட்டிய பிரபல நடிகர்

ram charan appreciated anushka bhaagamatie movie

ram charan appreciated anushka bhaagamatie movie

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் அனுஷ்கா ஷெட்டி பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தார். வரலாற்று சார்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா நடித்து நல்ல வெற்றியை மக்களிடையில் பெற்றிந்தார். இந்த வரலாற்று சார்ந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த படம் 'பாகமதி'. அதிரடி த்ரில்லராக உருவாகி இருந்த இப்படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜி.அசோக் என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் அனுஷ்காவின் அதிரடி வசனத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சம் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து பாராட்டுகளையும்  வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தினை பார்த்த தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் 'பாகமதி' படக்குழுவை வெகுவாக பாராட்டி ஃபேஸ்புக் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.   

பாகமதி படக்குழுவை பாராட்டிய பிரபல நடிகர்