மம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் முதன் முறையாக இணைந்த அனுஷ்கா

       பதிவு : Apr 02, 2018 15:30 IST    
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ள அனுஷ்கா தற்போது மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ள அனுஷ்கா தற்போது மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.

நடிகை அனுஷ்கா முதன் முதலாக நடித்த படம் ‘ரெண்டு'. இவர் தமிழ் திரையுலகில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அவரை முன்னணி கதாநாயகியாக உயர்த்தியது தெலுங்கு பட உலகம்தான். இவருக்கு தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்த 'அருந்ததி' படத்தின் மூலம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.

திகிலான கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்தி கொண்டார்.  மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின் ஆசை. இது தற்போது நிறைவேறி இருக்கிறது. 
 

 

விரைவில் தொடங்க இருக்கும் ஒரு மலையாள படத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை சரத் சந்திப் இயக்க உள்ளார். இவர் முன்னதாக மம்முட்டியை வைத்து, ‘பரோல்’ என்ற மலையாள படத்தை இயக்கி உள்ளார். அதில் மம்முட்டி சிறை கைதியாக நடித்து இருக்கிறார். 
 


மம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் முதன் முறையாக இணைந்த அனுஷ்கா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்