ads

அனுஷ்காவின் புதிய தோற்றம்

anushka new style

anushka new style

இஞ்சி இடுப்பழகி படத்தின் மூலம் உடல் எடையை அதிகப்படுத்திய அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் கிராபிக்ஸ் மூலம் உடல் எடையை மெலிதாக காண்பிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பிரபாஸ் தற்பொழுது நடித்து வந்த 'சாஹோ' படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்தும் உடல் எடை அதிகமாக இருப்பதினால் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை இழந்தார்.     

இதன் காரணத்தினால் உடல் எடையை குறைப்பதற்கு அனுஷ்கா அதிகமாக ஆர்வம் காட்டியதினை தொடர்ந்து வீட்டிலையே ஜிம் ஒன்றை உருவாக்கி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அசோக் இயக்கத்தில் 'பாக்மதி' என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வந்துள்ளார். இந்த படம் 2.0 படத்திற்கு போட்டியா ஜனவரி மாதத்தில் வெளிவரவுள்ளது.    

இந்த படத்திலும் கிராபிக் பயன்படுத்தி அனுஷ்காவின் உடல் எடையை குறைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சி நிலவிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் அனுஷ்கா ஒரு புதிய புகைப்படத்தினை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் எடை முற்றிலும் குறைந்ததோடு, ஹேர்  ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார்.    

  

அனுஷ்காவின் புதிய தோற்றம்