ads

8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்

அதர்வாவின் அடுத்த படத்திற்கு குருதி ஆட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதர்வாவின் அடுத்த படத்திற்கு குருதி ஆட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அதர்வா நடிப்பில் செம போதை ஆகாத படத்திற்கு பிறகு பூமராங், 100, ஒத்தைக்கு ஒத்த, இமைக்கா நொடிகள், ருக்குமணி வண்டி வருது போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பூமராங்' படத்தின் ட்ரைலரை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு அதர்வா, 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது. அதர்வா, இயக்குனர் ஸ்ரீ கணேஷ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு 'குருதி ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறுகையில் "என்னுடைய இரண்டாவது படமான இந்த படம் முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் உருவாக உள்ளது.

அதர்வாவின் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகும் இந்த படம் த்ரில்லராக உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகள் உறுதியானவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். பிக் பிரிண்ட் பிக்ச்சர்ஸ் மற்றும் ராக்போர்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

8 தோட்டாக்கள் இயக்குனர் அடுத்த படம் அதர்வா கூட்டணியில் உருவாகவுள்ளது.8 தோட்டாக்கள் இயக்குனர் அடுத்த படம் அதர்வா கூட்டணியில் உருவாகவுள்ளது.

8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்