ads

ஜப்பான் மொழியில் வெளியிட உள்ள 'பாகுபலி 2'

bahubali 2 movie on Japanese screening

bahubali 2 movie on Japanese screening

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்து திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்த படம் பாகுபலி 2. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்பட பலர் நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு புகழ் பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படம் அதிகமான பொருட்செலவில் மிக நுண்ணிய கலை நுணுக்கங்களை இயக்குனர் ராஜமௌலி கையாண்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.          

இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபாஸ் முதல் படத்திலையே தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை பிடிக்கும் வகையில் படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாபெரும் சாதனையை பெற்றிருந்தது. இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தினை முதல் முறையாக ஜப்பான் மொழியில் வருகிற 29ம் தேதி பெரிய திரையில் வெளியிட உள்ளனர். ஜப்பான் நாட்டிலும் இப்படத்திற்கான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யரலகட்டா அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிட்ட தக்கது. 

bahubali 2 movie on Japanese screening bahubali 2 movie on Japanese screening

ஜப்பான் மொழியில் வெளியிட உள்ள 'பாகுபலி 2'