ads

பலூன் படத்தின் உயிரிலே உயிரிலே பாடல் ரிலீஸ்

balloon movie uyirile uyirile song release

balloon movie uyirile uyirile song release

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த த்ரில்லர் படம் பலூன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்திருந்தனர். ஜெய் மற்றும் அஞ்சலி ஜோடி சரவணன் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்ததினை தொடர்ந்து தற்பொழுது இந்த த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜெய் புது வித கெட்டப்பில் ரசிகர்களை பயத்தில் மிரள வைக்கும் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து ஜீ தமிழ் வாங்கியுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கடந்த நாட்களில் இந்த படத்தில் இடம் பெற்ற 'மழை மேகம்' என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து 'உயிரிலே உயிரிலே' என்ற பாடலை நடிகை ஜனனி அய்யர் இன்று இரவு 8 மணிக்கு வெளியிட உள்ளார். இந்த பாடலுக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

 உயிரிலே உயிரிலே பாடல் வெளியீடு : 

இந்நிலையில் உயிரிலே உயிரிலே பாடலை ஜனனி அய்யர் வெளியிட்டுள்ளார். இந்த பாடல்  தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.  

பலூன் படத்தின் உயிரிலே உயிரிலே பாடல் ரிலீஸ்