ads

பலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி

mazhai megam video song

mazhai megam video song

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த த்ரில்லர் படம் பலூன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜெய் புது வித கெட்டப்பில் ரசிகர்களை பயத்தில் மிரள வைக்கும் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து ஜீ தமிழ் வாங்கியுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 'மழை மேகம்' என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

பலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி