ads

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா - வைரலாகும் வீடியோ

oviya jimikki kammal dance in saravana stores ad

oviya jimikki kammal dance in saravana stores ad

விமல் நடிப்பில் வெளிவந்த 'களவாணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகனான ஓவியா அதன் பிறகு மெரினா, கலகலப்பு, மதயானை கூட்டம், ஹலோ நான் பேய் பேசுகிறேன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கவிஞர் சினேகன், ரைசா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், ஜூலி, வையாபுரி, பிந்து மாதவி,பரணி போன்றவர்கள் சினிமா துறைகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து தற்பொழுது நடித்து வருகின்றனர்.    

 இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவின் பட வாய்ப்புகள் அதிகரித்து தற்பொழுது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரில்லரான 'காஞ்சனா 3' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக 'ஓவியா விட்ட யாரு சீனி', 'போகி' போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்ததினை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவது, விளம்பரங்களில் நடிப்பது என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ்  விளம்பரத்தில் பங்குகொண்ட ஓவியா ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் ட்ரெண்டான ஜிமிக்கி கம்மல் பாடலின் இசையை வைத்து வரிகளை மாற்றி பாடலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலுக்கு ஓவியா நடனமாடிய காட்சி தற்பொழுது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா - வைரலாகும் வீடியோ