ads

ஓவியா வெளியிட்ட புது பட தகவல்

oviya new movie updates

oviya new movie updates

விமல் நடிப்பில் வெளிவந்த 'களவாணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானாவர்  நடிகை ஓவியா. இதை அடுத்து மெரினா, கலகலப்பு, மத யானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவந்தார். இதற்கு அடுத்த படியாக விஜய் டிவியில் பிரபலமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்குகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனத்தினையும் கொள்ளைகொண்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஓவியா சிறைபிடித்திருந்தார். 

இதற்கு அடுத்த படியாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் அதிரடி திரில்லர் படமான 'காஞ்சனா 3' யில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்ட தட்ட 67% படப்பிடிப்பு முடிவந்திருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. மேலும் இப்படத்தினை அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கம், ஓவியா விட்டா யாரு சீனி, தெலுங்கில் ஐடி நா லவ் ஸ்டோரி போன்ற பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.    

இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று (20.12 17) லைவ் ட்விட்டர் சேட்டில் ஈடுபட்ட ஓவியா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை அளித்து வந்தார். இதில் ஒருவர் காஞ்சனா 3 படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க இருக்கிங்க? என்று கேட்டதிற்கு.....கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தின் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் பதிவில் வெளியிட்டிருந்தார்.       

        

ஓவியா வெளியிட்ட புது பட தகவல்