ads
சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் ட்ரைலர் வெளியீடு தேதி ஒத்தி வைப்பு
விக்னேஷ் (Author) Published Date : May 26, 2018 11:49 ISTபொழுதுபோக்கு
சீயான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு துருவ நட்சத்திரம் , சாமி ஸ்கொயர், மகாவீர் கர்ணா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் துருவ நட்சத்திரம் நீண்ட வருடங்களாக தாமாதமாகி கொண்டே வருகிறது. இதன் பிறகு சுமார் 300 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் 'மகாவீர் கர்ணா' இந்த படத்தை மலையாள இயக்குனர் ஆர்எஸ் விமல் இயக்க உள்ளார். இந்த படத்தின் பணிகளும் தற்போது துவங்கியுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தில் பிசியாக உள்ளார்.
இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படம் வரும் அக்டொபர் மாதத்தில் வெளியாகவுள்ளது. பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜான் விஜய் போன்ற பல திரை நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவில் ட்ரைலர் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. இதன்படி இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாவதாக இருந்தது.
ஆனால் தற்போது தமிழகமே தூத்துக்குடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் இந்த படத்தின் ட்ரைலரை தள்ளிவைத்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் "இது கொண்டாடவேண்டிய தருணம் அல்ல. ரசிகர்கள் உங்களுடைய ஆதரவுடன் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளோம். விரைவில் ட்ரைலரை வெளியிடுவோம்.
தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கிறோம். இந்த போராட்டத்தில் ஏராளமான பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார். இது போன்று அனைத்து சினிமா பிரபலங்களும் தூத்துக்குடி மக்களுக்காக பட வெளியீடு, படப்பிடிப்பு இவற்றை புறக்கணித்து போராட்ட களத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினால் தூத்துக்குடி மக்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
It’s not the time for celebration,so with all your permission ( #Saamy Lovers and #Chiyaan fans ) we are postponing our trailer launch..Will update,let’s pray for the ppl who lost their lives, more over pray this kind of situation should not continue Nd never happen..#saamy2
— Shibu Thameens (@shibuthameens) May 25, 2018