ads

சாமி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் சாங்

சாமி முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் திருநெல்வேலி அல்வாடா ஓப்பனிங் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் பாடலை உருவாக்கி வருகின்றனர்.

சாமி முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் திருநெல்வேலி அல்வாடா ஓப்பனிங் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் பாடலை உருவாக்கி வருகின்றனர்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003இல் வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை த்ரிஷாவை தவிர அனைத்து திரை பிரபலங்களும் இணைந்து நடித்து வருகின்றனர். த்ரிஷாவுக்கு பதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் புதியதாக இணைந்துள்ளார். காமெடி நடிகர் சூரியும் புது வரவாக இணைந்துள்ளார்.

முதல் பாகத்தின் ஓப்பனிங் பாடலான 'திருநெல்வேலி அல்வாடா' பாடலை போன்றே இந்த படத்திலும் மிரட்டலான ஓப்பனிங் பாடலை வைத்துள்ளனர். முதல் பாகத்தின் திருநெல்வேலி அல்வாடா பாடலுக்கு திருநெல்வேலி போன்று காரைக்குடியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். தற்போதும் திருநெல்வேலி செட் போட்டு காரைக்குடியில் 'டர்ர்னக்கா டர்ர்னக்கா' என்று தொடங்கும் பாடலை உருவாக்கி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தின் 'டர்ர்னக்கா டர்ர்னக்கா' பாடல் 'திருநெல்வேலி அல்வாடா' பாடலை போன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரையும் வரும் 26-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

சாமி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் சாங்