வைரலாகும் ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ

       பதிவு : Jan 11, 2018 15:30 IST    
chiyaan vikram sketch new promo viral chiyaan vikram sketch new promo viral

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படமான  'துருவநட்சத்திரம்' படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் லோக்கல் கெட்டப்பில் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இந்த  ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்துவருகின்றனர். இவர்களுடன்  மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்புகள் முவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. 

இப்படத்தினை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இந்த படத்தில் தமன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே' என மூன்று சிங்கிள் வீடியோ, டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் 'தீம்' (THEME) என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிடுவதாக இசையமைப்பாளர் தமன் அவரது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படக்குழு வெளியிட 'தீம்' ப்ரோமோ விடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு வலைத்தளத்தில் அதிகளவு ட்ரெண்டாகி வருகிறது.   

 


வைரலாகும் ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்