ads

மாரி 2 சண்டை காட்சி படப்பிடிப்பின் போது தனுசுக்கு படுகாயம்

மாரி 2 படப்பிடிப்பின் போது டொவினோ தாமசுடன் மோதும் போது தனுசுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மாரி 2 படப்பிடிப்பின் போது டொவினோ தாமசுடன் மோதும் போது தனுசுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'மாரி 2'. தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். நேற்று இவருக்கும் தனுசுக்கு இடையேயான சண்டை காட்சிகள் படமாக்க பட்டது.

இந்த படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக தனுசுக்கு இடது கையிலும், வலது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த தனுசுக்கு முதலுதவி செய்துள்ளனர். விரைவில் குணமாகி படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.  இந்த படத்தில் வரலட்சுமி, கிருஷ்ணா, வித்யா பிரதீப், அறந்தாங்கி நிசா, ரோபோ சங்கர் போன்ற திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இதில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்திலும், நாயகி சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யாரடி நீ மோகினி படத்திற்கு பின்னர் 10 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தனுஷ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

மாரி 2 சண்டை காட்சி படப்பிடிப்பின் போது தனுசுக்கு படுகாயம்