ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு

       பதிவு : May 22, 2018 18:06 IST    
பவர் பாண்டி படத்திற்கு தனுஷ் இயக்கத்தில் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது. பவர் பாண்டி படத்திற்கு தனுஷ் இயக்கத்தில் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, The Extraordinary Journey of the Fakir போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் மாரி 2 மற்றும் ஹாலிவுட் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வட சென்னை படமும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆனால் இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் தயாரிப்பாளர் பிரச்சனையால் பல வருடங்களாக தாமதமாகி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர் போன்ற திறமைகளை கையாண்டு வரும் தனுஷ் 2017இல் வெளியான 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் அறிவித்தார்.

 

மேலும் இந்த படத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல் அவரே நாயகனாகவும் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது மாரி 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருப்பதால் இந்த படத்தின் பணிகளை துவங்க முடியவில்லை. வரும் ஜூன் மாதம் வரை மாரி 2 படத்தின் பணிகள் நடைபெற உள்ளது. இதனை முடித்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் தான் இயக்க உள்ள அடுத்த படத்தை துவங்கவுள்ளார். இது தவிர இந்த படத்தில் தனுசுடன் இணைந்து நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்