வெளியானது சுப்பர் ஸ்டாரின் காலா ட்ரைலர்

       பதிவு : May 28, 2018 15:40 IST    
நேற்று இரவு வெளியான காலா டிரைலர், வெளியான 14 மணிநேரங்களில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. நேற்று இரவு வெளியான காலா டிரைலர், வெளியான 14 மணிநேரங்களில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது காலா படத்திற்கென்று டிவிட்டரில் நான்கு மொழிகளில் புதிய இமோஜியை வழங்கியுள்ளது.

இதற்காக ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரையும் நேற்று இரவு 7மணிக்கு வெளியிடுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்தார். அதன்படி இரவு 7 மணிக்கு வெளியான காலா டிரைலர் வெளியான 14 மணிநேரங்களில் 2.3மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கபாலி படத்திற்கு பின்பு ஒரு வருடத்திற்கு பிறகு ரஜினிகாந்த் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக உலகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

 

மும்பையில் தாராவி என்ற இடத்தில் சம்பவங்களையும், கதை களத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஸ்டாரின் வசனங்கள் பிரபலமாகி வந்தது. இதன் பிறகு இந்த படத்தின் இசையை பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடத்தி வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.


வெளியானது சுப்பர் ஸ்டாரின் காலா ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்