ads

இயக்குனர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அப்போலோவில் அனுமதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளரான மணிரத்னம் அவர்கள் தற்போது நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான இவர் 1983ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

35வருடங்களாக இதுவரை தமிழில் 26 படங்களையும் இந்தியில் 6 படங்களையும், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், அரவிந் சாமி உள்ளிட்ட பல முன்னணி திரைபிரபலங்களை வைத்து 'செக்க சிவந்த வானம்' என்ற மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவருக்கு தற்போது அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அப்போலோவில் அனுமதி