ads
இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வேலுசாமி (Author) Published Date : Mar 02, 2018 12:40 ISTபொழுதுபோக்கு
சினிமா துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவர் கன்னடத்தில் 1983-இல் வெளியான 'பல்லவி அனு பல்லவி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் தமிழில் இயக்கிய முதல் படம் 1985-இல் மறைந்த முரளி மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான 'பகல் நிலவு'. இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் இதய கோவில், மெளன ராகம், நாயகன், அக்னீ நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, தசரதன், திருடா திருடா, பாம்பே, இந்திரா, நேருக்கு நேர், தாஜ்மஹால், அலைபாயுதே, குரு, ராவணன், OK கண்மணி போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரான இவர் தற்போது வரை 35 படங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் 'காற்று வெளியிடை' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் தற்போது 'செக்க சிவந்த வானம்' படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
தொழிற்சாலை பிரச்சனைகளை கொண்டதாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் இன்று நிகழ்ந்துள்ளது.
இந்த விழாவில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடகா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இவர் ஆறு தேசிய விருதுகளையும் ஏராளமான திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் கடந்த 2002-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.