சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குனர் குறித்த தகவலை வெளியிட்ட ராஜேஷ்

       பதிவு : May 12, 2018 09:10 IST    
சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் ராஜேஷ் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீம ராஜா மற்றும் இயக்குனர் ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் இயக்கி  வரும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ராஜேஷ்க்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை இயக்குவதாகத்தான் இருந்தார். ஆனால் சூர்யாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாலும் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்ததாலும் அது நிறைவேறாமல் போனது.

சிவகார்த்திகேயன் முன்னதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு படம் நடித்து தர முன்வந்தபோதே, இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அடுத்த இயக்குனர் என்று தகவல் பரவியது. தற்போது பொன்ராம், ரவிக்குமார், ராஜேஷ் ஆகியோரை விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதுகுறித்து இயக்குனர் எம்.ராஜேஷ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தி இருக்கிறார்.

 

அதில் அவர் ’சீம ராஜா படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் தான் அடுத்த இயக்குனர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவு செய்ய கால அவகாசம் கேட்டு இருக்கார். அவர் சிவகார்திகேயனுக்காக தான் ஸ்கிர்ப்ட் எழுதி வருகிறார். அடுத்து அவர் சிவாவுக்கு படம் பண்ணுவார் என்று நினைக்கிறேன். என் கதை ரெடியா இருந்ததால், நான் முதலில் படம் பண்ண வேண்டியதாயிற்று’ என்று உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் எம்.ராஜேஷ்.


சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குனர் குறித்த தகவலை வெளியிட்ட ராஜேஷ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்