சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு

       பதிவு : May 07, 2018 17:23 IST    
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது உருவாகி வரும் படம் 'சீம ராஜா'. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சூரி ஆகியோர் ஆறாவது முறையாக இணைந்து நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரியின் கூட்டணி தமிழ் திரையுலகில் வலுவானதாக அமைந்துள்ளது. இவர்களின் காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக ஆக்சன், காமெடி போன்ற திறமைகளை ஒவ்வொரு படத்திலும் திறமையாக வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேலைக்காரன் படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பினை குவித்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்து வரும் 'சீம ராஜா' படமும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை போன்று கிராமங்களில் நடக்கும் அளப்பறைகளை சார்ந்ததாக உருவாகி வருகிறது.

 

இந்த படம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படமாகும். இயக்குனர் பொன்ராம், முன்னதாக வெளிவந்த தனது படங்களின் மூலம் ஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ் போன்ற புதுமுக நடிகைகளை பிரபலமாக்கினார். ஆனால் இந்த படத்தில் முன்னணி நடிகையான சமந்தாவை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி இணைந்துள்ளது.

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை விரைவில் துவங்க உள்ளனர். இதற்கான அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் டப்பிங் பணிகள் வரும் மே 15ஆம் தேதி உலக குடும்ப தினத்தில் துவங்க உள்ளது.

 


சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்