ads

தீரன் படத்தை பாராட்டிய இயக்குனர் சங்கர்

director shankar wishes theeran athigaram ondru movie

director shankar wishes theeran athigaram ondru movie

நடிகர் கார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை' இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தற்போது திரைஅரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. 1995 முதல் 2000 வரை நடந்த பவேரியா கொள்ளைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. அந்த கொள்ளை கூட்டத்தை காவல்துறையினர் எப்படி பிடித்தனர் எந்த வகையான துயரங்களை அனுபவித்தனர் என்பதை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாக இந்த படம் விளங்குகிறது. 

இந்த படத்தின் மூலம் மக்கள் பவேரியா கொள்ளை கூட்டத்தை பிடித்த காவல் துறையினரை மிகவும் பாராட்டி வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்களும் தற்போது வெகுவாக தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சங்கர் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் "மிகவும் பரபரப்பான காவல்துறையினரின் கதை. நகம் கடித்து சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ளனர். அற்புதமான முயற்சி." என்று நடிகர் கார்த்தி, இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் கிப்ரான் உள்பட படக்குழுவினரை மிகவும் பாராட்டியுள்ளார்.

தீரன் படத்தை பாராட்டிய இயக்குனர் சங்கர்