ads

விஜய் சேதுபதி படத்துடன் மோதும் மதுரவீரன் ஏமாளி

february 2 release movies

february 2 release movies

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது தமிழ் நாட்டின் பாரம்பரிய வீரத்தின் ஒன்றான ஜல்லிக்கட்டு சாகசத்தை மையமாக  கொண்டு ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்குகிறார். இவர் சகுனி, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சண்டி வீரன் தற்பொழுது உருவாக்கி கொண்டிருக்கும் விமலின் 'மன்னர் வகையறா' போன்ற படங்களில் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட்ட தக்கது.

வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை சில நாட்களுக்கு முன்பு நடிகர் சமுத்திரக்கனி வெளியிடத்தினை தொடர்ந்து விஜயகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்தார். அதற்கு அடுத்தபடியாக படத்தின் 'நெஞ்சிக்குள்ளே' என தொடங்கும் பாடலை பேட்மிட்டன் வீராங்கனை பீவி சிந்து வெளியிட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரைலரை வெளியிட்டார். இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. பொங்கல் விருந்தாக வெளியிட இருந்த  இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக  படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளிவிட்டது.  இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதே நாளில் விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படமும் வெளிவர உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பல வித கெட்டப்பில் முதல் முறையாக கையாண்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர்.      

மேலும் இந்த படங்களுடன் சேர்ந்து சமுத்திரக்கனியின் 'ஏமாளி' படமும் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி புது வித கெட்டப்பில் களமிறங்கியதோடு நான்கு மாறுபட்ட தோற்றங்களில் முதல் முறையாக நடித்திருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. லதா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாக்கி வரும் இப்படத்தில் சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியான போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.             

விஜய் சேதுபதி படத்துடன் மோதும் மதுரவீரன் ஏமாளி