ads

இறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்

நீண்ட நாட்களாக தளபதி 63 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இறுதியாகியுள்ளது.

நீண்ட நாட்களாக தளபதி 63 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 'மெர்சல்' படத்திற்கு பிறகு 'தளபதி 62' படம் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு நடிகர் பட்டாளத்தையே வைத்து சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமையவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது. விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லீயுடனும், இயக்குனர் மோகன் ராஜாவுடனும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இது தவிர சமீபத்தில் தலைவா 2 படத்திற்கான கதை தயாராக உள்ளதாகவும், விஜய் சம்மதம் தெரிவித்தால் அதற்கான பணிகளை துவங்கவுள்ளதாக இயக்குனர் ஏஎல் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இயக்குனர் மோகன் ராஜா 'தளபதி 63' படத்தினை இயக்க உள்ளதாக இறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயை சந்தித்து இயக்குனர் மோகன் ராஜா கதை கூறியுள்ளார். கதை பிடித்துப்போக விஜயும் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தளபதி 63 படத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை அழித்து வரும் மோகன் ராஜா, தனது வழக்கமான பாணியில் இந்த படத்தையும் சமூக அக்கறை உள்ள படமாக உருவாக்க உள்ளார். இந்த படத்தினை  AGS என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முன்னதாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது வரை இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், மதராசப்பட்டினம், எங்கேயும் காதல், அவன் இவன், மாற்றான், அனேகன், தனி ஒருவன், கவண் உள்ளிட்ட 19 படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 20வது படத்திற்கு நடிகர் விஜய் மற்றும் மோகன் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி வேலாயுதம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

இறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்