ads

ஜிவி.பிரகாஷ் ட்விட்டரில் நன்றி

naatchiyar movie stills

naatchiyar movie stills

பாலா இயக்கி வரும் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், ரோக்லின் வெங்கடேஷ் மற்றும் சிலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வெளிவந்த படத்தின் ட்ரைலரில் ஜோதிகாவின் ஒரு வார்த்தையினால் பல விமர்சனங்கள் வந்த நிலையில் இருந்தது. இதன் காரணத்தினால் ஜோவின் ரசிகர்கள் வருத்தகத்தில் இருந்தனர்.          

விமர்சனங்கள் ட்ரைலருக்கு எந்த அளவுக்கு கிடைத்திருந்ததோ அதை விட இரு மடங்கு வரவேற்புகள் கிடைத்ததால் மகிழ்ச்சியினை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்பொழுது வந்த தகவலின் படி, இது வரை ட்ரைலரை 2 மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் இணையதளத்தில் பார்த்து நல்ல வரவேற்புகள் கொடுத்ததிற்காக படத்தின் நாயகன் ஜிவி. பிரகாஷ் அவரது ட்விட்டரில் நன்றியை தெரிவித்துள்ளார்.    

ட்ரைலரை பார்த்தால் ஜோ அதிரடியில் இறங்கியிருப்பதாகவும், ஜி வி பிரகாஷ் படு லோக்கல் கெட்டப்பில் கலக்கி இருப்பதாகவும் தெரிகிறது. ட்ரைலரை போன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

ஜிவி.பிரகாஷ் ட்விட்டரில் நன்றி