ads

விஷாலின் இரும்பு திரை இறுதிகட்ட படப்பிடிப்பு - பஸ்ட் லுக் விரைவில்

விஷாலின் இரும்பு திரை இறுதிகட்ட படப்பிடிப்பு - பஸ்ட் லுக் விரைவில்

விஷாலின் இரும்பு திரை இறுதிகட்ட படப்பிடிப்பு - பஸ்ட் லுக் விரைவில்

திரைப்பட தயாரிப்பின் சங்க தலைவர் விஷால் தற்பொழுது சண்டகோழி 2, இரும்பு திரை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிஎஸ் மித்ரன் இயக்கும் 'இரும்பு திரை' படத்தில் சமந்தா நாயகியாகவும், அர்ஜுன் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி எடுக்கப்பட்டு வந்த இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புகளும் சென்னையை சேர்த்த அம்பத்தூரில் நடைபெற உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் விஷாலுக்கும் அர்ஜூனுக்கும் சண்டை காட்சிகள் இடம் பெற உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டதோடு, பல கோடி அளவிற்கு பணக்கட்டுகள் அடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இதனை பார்க்கும் போது அர்ஜுன் கொள்ளையடித்த பணத்தினை விஷால் சண்டை போட்டு மீட்பதாக தெரிகிறது.    

மேலும் விஷாலின் சொந்த நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் இறுதியில் வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   

விஷாலின் இரும்பு திரை இறுதிகட்ட படப்பிடிப்பு - பஸ்ட் லுக் விரைவில்