ads
'இருட்டு அறையில் முரட்டு குத்து' பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 25, 2017 21:17 ISTபொழுதுபோக்கு
'ஹர ஹர மகாதேவகி' படத்தினை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இரண்டாவது முறையாக கவுதம் கார்த்திக் நாயகனாக வைத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் பேய் படத்தினை இயக்கி வருகிறார். சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா இப்படத்தில் நாயகியாக நடிப்பது உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. சமீபத்தில் தாய்லாந்தில் எல்லாவித படப்பிடிப்புகளும் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னைக்கு திரும்பினார்.
மேலும் சென்னையில் பாடலுக்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக அனைத்து இடங்களிலும் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட இருக்கும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, ‘மீசையை முறுக்கு’ படப் புகழ் ஷாரா மற்றும் சிலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.