மாரி 2 படத்திற்கு பாடலை பாடிய இசைஞானி இளையராஜா

       பதிவு : Jan 17, 2018 13:02 IST    
ilaiyaraja sings on yuvan shankar raja movie maari 2 ilaiyaraja sings on yuvan shankar raja movie maari 2

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரேமம் புகழ் சாய் பல்லவி இணைகிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இணைந்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளார். இவர்களுடன் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், தனுசுக்கு வில்லியாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ஸ்டில் ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடலுக்கு 'மெலடி கிங்' இசைஞானி இளையராஜா பாடலை பாடியுள்ளார். இதற்கான புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இளையராஜா தனது சொந்த மகனான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் 'மாரி 2' படத்தில் பாடியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

 

ilaiyaraja sings on yuvan shankar raja movie maari 2ilaiyaraja sings on yuvan shankar raja movie maari 2

மாரி 2 படத்திற்கு பாடலை பாடிய இசைஞானி இளையராஜா


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்